விளாத்திகுளம் அருகே புதிய அங்கன்வாடி மையக்கட்டிடங்களை எம்.எல்.ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பொம்மையாபுரம் கிராமத்தில் ரூபாய் 16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், சக்கம்மார்புரம் கிராமத்தில் ரூபாய் 17. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், அருங்குளம் கிராமத்தில் ரூபாய் 17.25 லச்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்,சிறுமியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ரஞ்சித், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட பிரதிநிதி புதுராஜா,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.