விளாத்திகுளம் அருகே புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31-லட்சம் மதிப்பீட்டில்* கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம்
புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,
புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.