விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.57-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பெருமாள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.