விளாத்திகுளம் அருகே பல்வேறு பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இடைச்சியூரணி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 16.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் ப்ளாக் சாலை,வாதலக்கரை கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26.10- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை,கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.43.68- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை,காடல்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26.32- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை,மிட்டாவடமலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25.04- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை ,மல்லீஸ்வரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.07- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில்  புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.