விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹7,50,000 மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகம்மாள்,மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.