விளாத்திகுளம் அருகே புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்டுவதற்கான பணிகளை MLA மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.44- லட்சம் மதிப்பீட்டில் புதியஇரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணியையும் ரூ.17.15- லட்சம் மதிப்பீட்டில் கணினி ஆய்வகம் கட்டுவதற்கான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், பள்ளி தலைமையாசிரியை மெஸ்ஸி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயலட்சுமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.