விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையத்தை கட்டிடத்தை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.57-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குழந்தைகளுடன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இம்மானுவேல், வில்வமரத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர் சின்னப்பொண்ணு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.