விளாத்திகுளம் அருகே மக்கள் நலப்பணித் திட்டங்களை எம்.எல்.ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தில் உபரி நிதியின் கீழ் ரூபாய் 24.75- லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டுவதற்கான பணியையும்,அதே கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக தேசியவேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூபாய் 22- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் தொழிலதிபர் செல்வகுமார்,ஒப்பந்ததாரர் மனோகர், ஒன்றிய உதவி பொறியாளர் செல்வம்,மாவட்ட பிரதிநிதி முனியசாமி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.