விளாத்திகுளம் அருகே பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப்பணித் திட்டங்களை எம்.எல்.ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.72-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை,மாவிலோடை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.58-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, N.ஜெகவீரபுரம் ஊராட்சி,S.குமராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.35-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, N.ஜெகவீரபுரம் ஊராட்சி,T.சுப்ரமணியபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.42-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை, N.ஜெகவீரபுரம் ஊராட்சி, V.சுப்பையாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.87 -லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கழ் ரூ.17.10-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணி, கந்தசாமிபுரம் ஊராட்சி, P.ஜெகவீரபுரபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானசட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணியினையும் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
இந்நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொறியாளர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.