விளாத்திகுளம் அருகே ரூ.7.29-லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாக கட்டடத்தினை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.29-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பள்ளி மாணவ - மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
உடன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், பள்ளி தலைமையாசிரியை அழகம்மாள், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எர்ரையா,புதூர் பேரூர் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.