விளாத்திகுளம் அருகே புதிய நியாய விலை கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை  கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.51-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டிடத்தினை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்..

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன்,மேல்மாந்தை  ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்தையாசாமி வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரீஸ்வரி வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.