78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காடல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கொடி ஏற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மூவர்ண கொடியேற்றி, கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 400-  மதிப்பெண்கள் மேல் பெற்ற அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கி,மரக்கன்றுகள் நட்டினர்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை நாடாளுமன்ற செல்வி,வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,ஊராட்சி மன்ற தலைவர் செண்பகராமன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள்,மாணவ -  மாணவிகள் கலந்து கொண்டனர்.