விளாத்திகுளம் அருகே விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் 2024-2025 ஆண்டிற்கான இடுபொருள்கள் வழங்கும் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உளுந்துவிதை,பயிறு நுண்ணூட்ட உரம்,திரவ உயிர்உரம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கல்பனா தேவி, துணை வேளாண்மை அலுவலர் ராமன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கரிசல் பூமி சங்கத்தலைவர் வரதராஜன், உதவி வேளாண்மை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.