விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 110 மாணவர்களுக்கு இலவசம் மிதிவண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி உரையாற்றி, வரும் அரசு பொதுத்தேர்வில் மாணவ,மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் பேசி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பள்ளியில் செயலாளர் ரவீந்திரன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை ரெஜீலா, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,தூத்துக்குடி வடக்கு மாவட்டமுன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், பேரிலோவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெத்தனாட்சி,ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, சிங்கிலிபட்டி கிளைச் செயலாளர் கோபால், சிங்கிலிபட்டி பேச்சியப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.