விளாத்திகுளம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய எம்எல்ஏ மார்கண்டேயன்! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் கவுண்டன்பட்டி,மாதலபுரம்,லட்சுமிபுரம்,பட்டிதேவன்பட்டி,மேல அருணாச்சலபுரம்,கீழ அருணாச்சலபுரம், நாகலாபுரம்  ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா  மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்,மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா  புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உலகம்மாள் முனியசாமி, சமுத்திரக்கனி,லட்சுமி, கார்த்திகேயன்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.