விளாத்திகுளம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கிய MLA மார்கண்டேயன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கரந்தை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் நாகலாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மருதம் ப்ரைட்டன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புதாய், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.