விளாத்திகுளத்தில் 136- பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை MLA மார்கண்டேயன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விளாத்திகுளம் பகுதியில் உள்ள 136- பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மேற்பார்வையாளர்கள் சந்திரா ஜெயராணி, பகவதி சாந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.