மழையால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய MLA மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தமாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக லட்சுமிபுரம், விருசம்பட்டி, சுப்பிரமணியபுரம், வில்வமரத்துப்பட்டி, விளாத்திகுளம் (ராஜீவ் நகர்)உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு JSW- நிறுவனத்தின் சார்பாக வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் JSW தலைவர் தென்னவன், JSW மூத்த மேலாளர் பாரதி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.