விளாத்திகுளத்தில் MLA மார்கண்டேயன் தலைமையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து ஆய்வு கூட்டம்! !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு செய்து, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கிராமச்சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மரங்கள் நடுவதற்கு அறிவுறுத்தினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், அரவிந்த் மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் உட்பட ஒன்றிய பணி பார்வையாளர்கள், பொறியாளர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.