விளாத்திகுளம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும்,ஆசிரிய - ஆசிரியைகளுக்கு பரிசு பொருள்களும் பள்ளியில் வினாடி - வினா போட்டி வைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும் வழங்கினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அற்புதராஜ்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், உட்பட ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.