விளாத்திகுளம் அருகே நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மார்கண்டையன் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இராமச்சந்திராபுரம் ஊராட்சியில் மாவிலோடை, மிட்டாவடமலாபுரம்,முத்தையாபுரம், காடல்குடி,லட்சுமிபுரம், இராமச்சந்திராபுரம், வாதலக்கரை, கே.துரைச்சாமிபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு மற்றும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்வில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, உதவி செயற்பொறியாளர் மின்வினியோகம் செந்தில்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், இராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, மாவிலோடை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரி, மிட்டாவடமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன்,வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், முத்தையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமையனன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் கிளைச் செயலாளர் , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.