விளாத்திகுளம் அருகே கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்கண்டயேன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பொருளாதார கருத்தரங்கில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். 

மேலும் கல்லூரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து கல்லூரியில் பயிலும்  மாணவ - மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மரங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நட்டி வளர்த்திடவும் ஆலோசனை வழங்கினார். 

இக்கருத்தரங்கு கூட்டத்தில் கல்லூரி முதல்வர் ராமலிங்கம்   பேராசிரியர்கள் செல்லச்சாமி, மைக்கேல் பெனிஸ், லட்சுமி பிரியா, அய்யனார்,சுரேஷ் பாண்டி,மகேஷ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.