விளாத்திகுளம் அருகே 3 புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்கண்டயேன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி இந்து நாடார் தொடக்கப்பள்ளியில் திரு.A.N.S.கோவிந்தசாமி, திரு.A.N.R.தங்ககனி,திரு.A.N.G.ரவீந்திரன் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் நூற்றாண்டு விழா, மற்றும் மூன்று புதிய வகுப்பறை கட்டிடத்தினை பள்ளி கல்வி குழு உறுப்பினர் செல்வகுமார் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
மேலும் தி.வெ.நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு,11-ம் வகுப்பு,12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் வழக்கறிஞர் திருமதி.ரெபேக்கா அனிட்டா மார்கண்டேயன் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ரஜூலா ,இந்து நாடார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) திருமதி.கிரேஸ்ஷீபா ஜெயராணி , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரியர்கள் - ஆசிரியைகள்,மாணவ - மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.