விளாத்திகுளம் அருகே காடல்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டயேன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம்,காடல்குடி ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார்.மேலும் கிராமத்தில் விவசாய விளைநிலங்களில் வேப்ப மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
நிகழ்வில் வட்டார
வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா உதவி செயற்பொறியாளர்
மின்விநியோகம் செந்தில்குமார், புதூர் வேளாண்மை துறை துணை அலுவலர் ராமன், புதூர் வட்டார
கல்வி அலுவலர் ராமசுப்பிரமணியன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய
ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை
அமைப்பாளர் இம்மானுவேல்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீதர் உட்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.