விளாத்திகுளம் அருகே சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்த எம்எல்ஏ மார்கண்டடேன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலப்புரம் கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருஉருவ சிலையையும்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திருஉருவ சிலையையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், பூதலப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாதலப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சைவத்துரை, மாதலப்புரம் நிலக்கிலார், திருக்கண்ணத்தேவர், நூத்தலக்கரை கிளை செயலாளர் முத்துராஜ், புதூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, பூதலப்புரம் கழக நிர்வாகிகள் மாரிமுத்து, வேலுச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.