விளாத்திகுளம் அருகே ரூ.96.50 லட்சம் மதிப்பில் 2 புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி திலி.தனி 127-சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48.50-லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் மற்றும் திலி.தனி 214- ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48-லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் என ரூ.96.50 லட்சம் மதிப்பில் 2 புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டிடப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கூட்டுறவு சங்க செயலாளர் சுசிலா, கூட்டுறவு சார் பதிவாளர் மகேஷ் கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன் ஒன்றிய பொருளாளர் கோசலைராம் ஊர் தர்மகத்தா அஸ்வத்தம்மன் கிளைச் செயலாளர் காந்தி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புலட்சுமி மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பெப்பின்காகு, கிளைச் செயலாளர்கள் சடையாண்டி, சந்திரசேகரன், சரவணன், சுந்தர், அழகர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.