விளாத்திகுளம் அருகே புதிய பயணியர் நிழற்குடையை MLA திறந்து வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  திறந்து வைத்தார்.

நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த், வெங்கடாசலம் , புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , மேலக்கரந்தை   ஊராட்சி மன்ற தலைவர் முத்துமுனியம்மாள்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.