விளாத்திகுளம் அருகே கிரிக்கெட் போட்டியை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில் நேதாஜி பாய்ஸ் நண்பர்கள் நடத்தும் 19-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வெற்றி பெற வாழ்த்தினார்.

நிகழ்வில் கிராம பொதுமக்கள்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.