விளாத்திகுளத்தில் நட்பு ரீதியான இறகுப்பந்து போட்டியை MLA துவக்கி வைத்தார்.

தைத்திருநாள் தமிழர் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேட்மிட்டன் கிளப் சார்பாக 16- வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 40- வயதிற்கு  மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், அனைத்து வயதினருக்குமான ஒரு பிரிவாகவும் நட்பு ரீதியான இறகுப்பந்து போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார். 

நிகழ்வில் விளாத்திகுளம் பேட்மிட்டன் கிளப் தலைவர் பொன்பாண்டியன், பேட்மிட்டன் பயிற்சியாளர் கல்யாண்குமார், கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.