விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு MLA  உள் நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அறம் செய் அறக்கட்டளையின் சார்பாக ரூ.30000/- மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு வீல் சேர் மற்றும் ஸ்ட்ரக்சரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ், சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன்,அறம் செய் அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டிகள்,பாரதிசங்கர்,சுரேஷ், செந்தில்வேல், மருத்துவர்.செந்தில்குமார் மற்றும் அறம் செய் கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.