விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்சார ஊழியர் எம்.எல்.ஏ ஆறுதல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்ற மின்சார ஊழியர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.உயிரிழந்த முனீஸ்வரனின் உடலுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.