விளாத்திகுளத்தில் புதிய இரண்டு மகளிர் விடியல் பேருந்தினை எம்.எல்.ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து, தூத்துக்குடி மாவட்ட விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியான கந்தசாமிபுரம் கிராமத்திற்க நாகலாபுரம்,புதூர்,மாதலாபுரம் வழியாக கந்தசாமிபுரம் கிராமத்திற்கும், அதேபோல் விளாத்திகுளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழிக்கு காடல்குடி,சின்னூர் வழியாக பெருநாழிக்கும் மற்றும் வேலிடுபட்டி, பேரிலேவன்பட்டி வழியாக கீழநம்பியாபுரம் கிராமத்திற்கும் புதிய இரண்டு மகளிர் விடியல் பேருந்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் பனிமனை மேலாளர் A.M.சாமி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பணிமனை திமுக தொமுச செயலாளர் மாரிமுத்து, தொமுச தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.