அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேல்நிலைப் பயிலும்   மாணவ மாணவிகளுக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில்  பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.