மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த பாரதி பிறந்த இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன்!




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருக்கும் மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25ந்தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் பொதுப்பணித் துறை மூலமாக தொடங்கியுள்ளது.இந்நிலையில் சேதமடைந்த பாரதியார் இல்லத்தை தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் சீரமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின் போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.



இதனை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே கீழ்நம்பிபுரத்தில் முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட 17வயது சிறுமியின் இல்லத்திற்கு சென்று  அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார். மேலும் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.