பசுவந்தனையில் கூடுதல் இரண்டு மின் மாற்றியை பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பசுவந்தனையில் ரூபாய் 12,50,000 மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் மின்மாற்றியை தமிழக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர், இந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.