விளாத்திகுளம் அருகே தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மதிய உணவு பரிமாறிய அமைச்சர் கீதா ஜீவன்!
தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் புத்தாடை வழங்கி மதிய உணவு பரிமாறினார், அதனைத் தொடர்ந்து எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு தேவையான உணவுகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து எட்டையாபுரம் டிரஸ்ட் மனநலக காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவுவை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையாபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.