விளாத்திகுளம் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சியில் "கருப்பசாமி பாடலுக்கு" சாமியாடிய ஆண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் ஆடி மாத கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது, திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டி, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி, பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் குளத்தூர் கிராமமே கடந்த ஒரு வாரமாக ஊர் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது, இந்நிலையில் திருவிழாவில் இறுதி நாளான இன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் முதலில் சாமி பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கும், தமிழக அரசியல் தலைவர்களின் பாடல்களுக்கும் நடன கலைஞர்கள் சிறப்பாக ஆடிவந்தனர், இதை குளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு வசித்து வந்த நிலையில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் இறுதி பாடலில் "கருப்பசாமி" பாடலுக்கு நடன கலைஞர் மேடையில் ஆடிக் கொண்டிருந்தபோது ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் சாமி அருள் வந்து மிகவும் உக்கிரமாக ஆடினர்...