பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலிபட்டி கிராமத்தை சேர்ந்த அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி முத்து தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் சிந்தலக்கரையை சேர்ந்த கண்ணன் தலைமையில் ஏராளமானோர் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி செயலாளர் சின்னப்பன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளை அதிமுக சால்வை அணிந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குட்டி என்ற வையனன்,கண்ணன்,ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.