விளாத்திகுளம் அருகே  மீனாட்சிபுரம் "உச்சினி மாகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா" வெகு விமர்சையாக நடைபெற்றது!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சிபுரத்தில், நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட "அருள்மிகு ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் இன்று ஜூர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜைகள், கௌரி மூல மந்திர திரவிய ஹோமம், நாடி சந்தனம், ஸ்பர்ஷாஹீதி, மகா பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் காலை 10 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் ஆலய விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மீனாட்சிபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.