சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவியை காப்பாற்றிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு பயிலும் கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெஸ்ஸி என்ற மாணவி இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்து ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விளாத்திகுளத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மாணவி ஜெஸ்ஸி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மாணவி படுகாயம் அடைந்தார்.


சாலை விபத்தில் சிக்கிய மாணவியை விளாத்திகுளத்திலிருந்து புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  தனது வாகனத்தில் நாகலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவிக்கு முதலுதவி அளித்து, அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி மாணவியின் பெற்றோருக்கு தேவையான உதவியை அளித்தார்.


இந்த விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.