விளாத்திகுளத்தில் கால்வாய் சீரமைக்கும் பணியினை  மார்கண்டேயன் MLA ஆய்வு செய்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு வேம்பார் செல்லும் சாலை காவல் நிலையம் அருகே கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு மதிப்பீடு செய்வதற்கும் மழை நீர் செல்லும் வடிகால் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு செய்து உடனடியாக சீர் செய்வதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,விளாத்திகுளம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.