விளாத்திகுளம்
அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிச்சாமி குண்டர் தடுப்பு
சட்டத்தில் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் கடந்த 17.10.2023 அன்று வெம்பூர் பகுதியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற ராணுவ வீரரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் (எ) நரிகவுண்டர் மகன் மாரிச்சாமி (28) என்பவரை மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி மாரிச்சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயசந்திரன் அவர்களும்,மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் (எ) நரிகவுண்டர் மகன் 1) மாரிச்சாமியை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 எதிரிகள் உட்பட 154 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.