விளாத்திகுளம் அருகே குளங்களில் நீர் நிரம்பி வரும் நிலையில் மதகுகளை MAL மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு! 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் மற்றும் லட்சுமிபுரம் கிராம ஊராட்சி குளங்களில் நீர் நிரம்பி வரும் நிலையில் மதகுகளை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்பொது  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் போஸ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.