விளாத்திகுளம் அருகே சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் காற்று பன்றிகளால் சேதம்: விவசாயிகள் கவலை...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர் நாகலாபுரம்,காடல்குடி, எட்டையாபுரம்,படர்ந்த புளி,முத்தலாபுரம், குளத்தூர் உள்ளிட்ட வருவாய் கிராமப்பகுதிகளில் இந்த ஆண்டு மிளகாய் செடிகளை குறைத்து வழக்கத்துக்கு மாறாக மக்காச்சோள பயிர்களை இந்தாண்டு அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர், சென்னம்பட்டி, மாதலாபுரம்,L.V.புரம்,P.ஜெகவீரபுரம், சேர்வைகாரன்பட்டி, கந்தசாமிபுரம், பூதலாபுரம், மாவிலோடை,சின்னூர், காடல்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக விளாத்திகுளம் பகுதிகளில் காற்று பன்றிகளால் மக்காச்சோளம் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் ஆண்டுக்கு,ஆண்டு சேதம் அடைந்து வருகிறது, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த விவசாயி பயிர்களுக்கு இழப்பீடு தொகை வாங்கித்தர வேளாண்மைத்துறை முன் வருவது இல்லை என்றும்,விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
எனவே ஆண்டுக்கு,ஆண்டு பெருகிவரும் காற்று பன்றிகளை கட்டுப்படுத்தவும், காற்று பன்றிகளால் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று புதூர் மற்றும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.