மகாகவி பாரதியார் 144-வது பிறந்த நாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் மரியாத:மகாகவி பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகள் மற்றும் பல்லக்கு ஊர்வலம்!
மகாகவி பாரதியார் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ,மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர், பள்ளிக் குழந்தைகள் மகாகவி பாரதியார் வேடமிட்டு ஊர்வலமாக வந்து மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கம்பம் பாரதி இலக்கியப் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் வேடம் அணிந்த குழந்தையை பல்லாக்கில் தூக்கி பாரதியார் இல்லத்தில் இருந்து மணி மண்டபம் ஊர்வலமாக வந்தனர் .