எட்டயபுரம் மணிமண்டபத்தில்  அரசு சார்பில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா!

மகாகவி பாரதியார் அவர்களின் 143வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டயபுரம் வட்டாட்சியர் சங்கரநாராயணன் அவர்கள்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.