விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு, மூதாட்டி வழக்கில், தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவை ரத்து. செய்து மதுரை அமர்வு உத்தரவு ! 


தமிழக அரசுத்தரப்பில் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவருக்கு ஏற்கனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போது தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார். 

ஆகவே மூதாட்டி கொலை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, " தர்ம முனீஸ்வரனுக்கு மூதாட்டி கொலை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


இதே போல மாணவியின் பெற்றோர் தரப்பிலும், மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், "இந்த வழக்கில் ஏற்கனவே அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.