M. குமாரசக்கணபுரம் கிராமத்தில் ஓடை உடைப்பை சரி செய்யாததால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் : அதிகாரிகள் அலட்சியம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள M. குமாரசக்கணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஓடையின் கரைகள் சேதம் அடைந்திருப்பதன் காரணமாக கடந்தாண்டு பெய்த கனமழையின் போதும் வெள்ளம் ஊருக்குள் புகுந்து கிராமமே நீரில் தத்தளித்தது. அப்போதே இந்த கிராம மக்கள் ஓடையின் உடைப்பை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தனர். ஆனால் கிராம மக்களுக்கு ஓடை உடைப்பை சரி செய்யப்படும் என பதில் வந்தது தவிர நடவடிக்கை எதுவும் வந்த பாடில்லை... இதன் காரணமாக தற்போது பெய்த மழையினால் முழுவதுமாக நிரம்பிய ஓடை தண்ணீர் ஊருக்குள் சென்று குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே ஓடை உடைப்பு காரணமாக கிராமமே தத்தளித்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தற்போது மீண்டும் அதே சூழ்நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்  மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது....



எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக M.குமாரசக்கணபுரம் கிராம ஓடையை சரி செய்து கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களின் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்....