ஓட்டப்பிடாரம் அருகே வாகன விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சாமி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானதுரை (45) லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று மாலையில் ஞானதுரை தனது இருசக்கர வாகனத்தில் புதுயும்புத்தூர் சென்று விட்டு சாமி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஞானதுரையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஞானதுரை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தனது மனைவியுடன் ஆட்டோவில் தனது சாமிநத்தம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கந்தஜோதி எந்திரித்து பார்த்த பொழுது தனது கணவர் ஞானதுரை இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த ஞானதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.