விளாத்திகுளத்தில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.


புதுக்கோட்டை மாவட்டம் முதுகுளம் - கந்தவர்கோட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவரின் மகன் வீரமுத்து (42), லாரி டிரைவர் ஆன இவர்  விளாத்திகுளத்தில் திருமணமாகி கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 3 பிள்ளைகளுடன்  விளாத்திகுளத்தில் வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் வீரமுத்து மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் சண்டை போடுவதாக வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 21-10-2024 திங்கள் கிழமை இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் சண்டையிட்ட வீரமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வீரமுத்து உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.